ஜூன் 22 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ரூபாய் ஆயிரம் நிதி உதவியை வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரனோ பாதிப்பைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு இரண்டாவது கட்ட நிலையை எட்டும்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பத்து நாட்கள் கூட கடக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது. தொடர்ந்து மீண்டும் முடக்கத்தை அறிவிக்க பல்வேறு மாநிலங்கள் காத்திருக்கின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு போது முடக்கம் ஏற்படுத்த உள்ளதை தொடர்ந்து, பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ1000 வழங்க உத்தரவிட்டார். அதன்படி, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள ரூபாய் 1000 நிதியை வருகின்ற ஜூன் 22-ம் தேதி முதல் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கே நேரடியாக கொண்டு சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.