கொரோனவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், திரிபுரா முதல்வர்கள் உள்பட 6 மாநில பிரதிநிதிகள் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்போது அவர் தெரிவித்ததாவது, ” ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு விகிதம் இந்தியாவில் 50% விட அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு.
முன் கூட்டியே ஊரடங்கு கொண்டு வந்ததற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 50 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் கவலை அளிக்கிறது. பொது மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோயால் இருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தனியார் துறை ஊழியர்கள் அதிகம் பணிக்கு திரும்பி வருகின்றனர். ஊரடங்கு தளர்வால் பொருளாதாரத்தை மெல்ல மெல்ல மீட்டு எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களுக்கு உதவும் எனக்கூறியுள்ளார்.
இப்போது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என கூறிய அவர், நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தற்போது அதிகரித்துள்ளது என தெரிவித்தார். சிறு குறு தொழில், தோட்டக்கலைத் துறை பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது” எனவும் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும் மாநிலங்களில் உள்ள கள நிலவரங்களை குறித்து கேட்டறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.