Categories
தேசிய செய்திகள்

Breaking: புதுச்சேரி பல்கலை.யின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து…!!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீங்க வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகள் வரை தேர்வு இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழகம் மற்றும் புதுவையில் அறிவிக்கப்பட்டது. எனினும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ப்படவில்லை. இந்த நிலையில், புதுச்சேரி பல்கலைகழகம், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும், புதுச்சேரியில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 215 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி பிள்ளையார்குப்பம், கோரிமேடு, வைத்திக்குப்பம், காரைக்காலை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |