மேஷ ராசி அன்பர்களே …! நீங்கள் செய்யக்கூடிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி ஏற்படும். பல வழிகளிலும் அதிக லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக அமையும். போட்டியில் விலகிச்செல்லும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் இருக்கும். சிறப்பான விஷயங்கள் இல்லத்தில் நடைபெறுவதற்கான சூழல் இருக்கும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.
புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்தால் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.