Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகள்… கொலையாளி யார்?… போலீசார் விசாரணை..!!

பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சுபேஹா காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பகுதியில், பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் தன்னுடைய பிள்ளைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் மகள் இருவரது உடல்களை மீட்டனர். மேலும், காயத்துடன் கிடந்த மற்றொரு மகளை மீட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பராபங்கி காவல்துறைக் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி கூறுகையில், ”விசாரணையில், இறந்து கிடந்த பெண்ணின் கணவர் குவைத்தில் பணிபுரிந்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 20  நாள்களுக்கு முன்பு இந்தப் பெண், தன்னுடைய குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் இருந்து இங்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு இரவு விருந்திற்கு சென்று வந்ததுள்ளனர்.

மேலும், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டில் இவர்களுக்குத் நன்கு தெரிந்த யாரேனும் சென்று, அடித்து கொலை செய்திருக்கலாம் என்கின்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |