Categories
உலக செய்திகள்

கரும்புத் தோட்டத்தில் 6 வயது சிறுமி சடலம்….. ஒரு மாத விசாரணையில் பகீர் தகவல்….!!

பெற்ற மகளை தானே கொலை செய்துவிட்டு கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டூர்பன் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் Alexia என்கிற 6 வயது சிறுமி கடந்த மாதம் 31 ஆம் தேதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய்  Fungai காவல்நிலையத்தில் தனது மகளை காரில் கடத்தி சென்றுவிட்டனர். காரின் பின் சீட்டில் மகள் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தால் என புகார் அளித்துள்ளார் .

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை  தேடி வந்த நிலையிலையே கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட போது சிறுமியை பெற்ற தாய் fungai தான்  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடினார் என்பது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிபதிகளின் உத்தரவின் அடிப்படையில் மனநல பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஜிம்பாப்வே  kiwikiwi நகரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. சிறுமியின் உறவினர்கள் கூறுகையில் கூச்ச சுபாவம் கொண்ட குழந்தை Alexia.  எப்பொழுதும் தந்தை தாயுடன் இருப்பதையே விரும்புவாள். அப்படிப்பட்ட குழந்தையை தாயே  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |