கால்வான் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் விளக்கியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்து இருக்கின்றார்கள். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. சீனா தரப்பில் 43 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன ராணுவம் சார்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகாத நிலையில் தற்போது இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது கால்வான் பகுதியிலிருந்து இருதரப்பும் விலகி உள்ளதாக ராணுவம் உறுதி செய்துள்ளது. எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது