கான்பூரில் 250 பேரை கடித்த குரங்கிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் கலுவா என்னும் குரங்கை வளர்த்தவர் அந்த குரங்கிற்கு மது குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் எப்போதும் மது குடிக்கும் போதிலும், அதில் ஒரு பங்கை அந்த குரங்கிடம் கொடுத்து குடிக்க வைத்த பின், போதையில் 2 பேரும் ஒன்றாக படுத்து உறங்கி விடுவார்கள். இதையடுத்து குரங்கை வளர்த்தவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உயிர் இழந்த நிலையில், அவருக்குப்பின் குரங்கிற்கு மது கொடுக்க ஆளில்லை.
எனவே மது கிடைக்காத விரக்தியில் கிட்டத்தட்ட கான்பூர் பகுதியில், 250 பேரை இந்த கலுவா என்ற குரங்கு கடித்துள்ளதுள்ளது. இதனை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டாலும், மிருகங்களையும் கொள்வதற்கு தயங்காது என அச்சப்பட்டு அதனை கூண்டில் அடைத்து வைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறைக்கைதியாக கூண்டில் இருந்த குரங்கை மீண்டும் பரிசோதித்தபோது அது கொஞ்சம் கூட திருந்தவில்லை என்பது தெரிய வரவே, வாழ்நாள் முழுவதும் சாகும் வரை அந்த குரங்கு கூண்டில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.