மகாராஷ்டிராவில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1409 பேர் பலியானதையடுத்து மொத்த உயிரிழப்பு 5,537ஆக உயர்ந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை நெருங்குகின்றது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 7 வது நாளாக 2,500யை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி 13ஆயிரத்து 445ஆக உயர்ந்து. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 935 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்.
புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,409 பேர் பலியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,537ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1802 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை மகாராஷ்டிராவில் 57 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்
அம்மாநில சுகாதாரத்துறை அளித்த தகவல் படி நேற்று 28 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 935 பேருக்கும், தானே மாவட்டத்தில் 596 பேருக்கும், புனே மாவட்டத்தில் 496 பேருக்கும், அவுரங்காபாத் மாவட்டத்தில் 71 பேருக்கும், பல்கார் மாவட்டத்தில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,