இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படி நாடு முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 537 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 48 ஆயிரத்து 019 பேர் பாதிக்கப்பட்டு, 528 பேர் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியில் 44 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரை ஆயிரத்து 837 பேர் பலியாகினர்.
குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 14 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 435 பேர் பலியாகிவிட்டனர். ராஜஸ்தானில் 13 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 11 ஆயிரத்து 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 495 பேர் உயிரிழந்துள்ளனர்.