Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு பேர் மரணமா ? புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் மேலும் 2,004 பேர் உயிரிழந்ததி தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 11,921 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக 11,090 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 161ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 643 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 552 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.  நேற்று மட்டும் இதுவரை என்றுமே இல்லாத அளவாக மகாராஷ்டிராவில் 1409 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |