மகர ராசி அன்பர்களே …! இன்று செயல்பாடுகளில் தடை தாமதங்கள் போன்றவை ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்குதான் காணப்படும்.
வியாபாரம் தொடர்பான பயணங்கள் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும். உழைப்பு இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையில்லாத உடல் அலைச்சல் சோர்வு ஏற்படும். நிதி மேலாண்மையில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். உற்றார் உறவினர் வகையிலும் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். தேவையில்லாத செயலில் மட்டும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
காதலர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யும் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.