Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மனகவலை நீங்கும்…அந்தஸ்து உயரும்….!

மீன ராசி அன்பர்களே…!   இன்று பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். எதிர்பார்த்தபடி அனைத்து விஷயங்களும் சிறப்பைக் கொடுக்கும். காதலில் வெற்றிகிடைக்கும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். வாக்கு வாதங்கள் மற்றும் மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும்.

உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். திட்டமிட்டு காரியத்தை செய்தால் மிக சிறப்பாக நீங்கள் செய்யலாம். புதிதாக காதல் வயப்பட்ட கூடிய சூழல் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். புதிதாக நண்பர்கள் உங்களுக்கு அறிமுக மாவார்கள் அவரிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது  ரொம்ப நல்லது.

காதலர்களுக்கு இனிமை காணும் நாளாகத்தான் இருக்கும். செயல்பாடுகளில் மட்டும் கொஞ்சம் கவனம் வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |