ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுவதன் காரணம்:
5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமன்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்தியாவில் பதஞ்சலி முனிவர் மூலமாக தோன்றி அவரின் வழிவழியாக தற்போது வரை நாம் யோகா கலையை பயன்படுத்தி வருகிறோம்.
யோகம் என்றால் இணைதல் என்று பொருள். யோக கலை என்பது வேத காலத்திற்கு முன்பு தோன்றியதாக கருதப்படுகிறது. ஆரோக்கிய முன்னேற்றுவதில் தொடங்கி மோட்சத்தை அடைவது வரை பல குறிக்கோள்களை கொண்டுள்ளது. யோகா கலை மிகப்பழமையான காலத்திலிருந்து தற்போதைய காலம் வரை யோகிகளால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை செய்வதால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திகள் கிடைப்பதாக யோகிகளால் நம்பப்படுகிறது. தினமும் காலையில் 12 யோகாசனங்களை அடங்கிய சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் ஆரோக்கியமடைவது மட்டுமல்லாமல் மன அமைதியும் கிடைக்கும்.