நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குக்கர் சின்னத்தை வழங்குவதில் என்ன சிக்கல் எனக்கேட்டனர். அதற்கு தினகரன் தரப்பில் கட்சி பதிவு செய்யவில்லை என்று பதிவு செய்யவில்லை என்றும் , பதிவு செய்யாத கட்சிக்கு பொது சின்னத்தை வழங்க முடியாது என்றும் பதிலளித்தனர். இதையடுத்து குக்கர் வழங்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் அமமுக ஒரே அமைப்பாக செயல்படுவதால் அதை கட்சி போன்று கருதி பொதுச் சின்னத்தில் ஏதேனும் ஒன்றை பரிசளித்து வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் அனைவருக்கும் பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களும் பொதுவான சின்னமாக இது வழங்கப்படுகிறது. இந்த சின்னத்தை மக்களிடம் தெரிவித்து வெற்றி பெறுவோம் என அமமுக நிர்வாகியும் , நாடாளுமன்ற வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார் .