Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக நிர்வாகி வி.பி.கலைராஜனுக்கு கொரோனா – கழகத்தினர் அதிர்ச்சி …!!

திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் திமுகவினர் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Categories

Tech |