சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா – சீனா வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன வீரர்களும் இந்திய வீரர்களுக்கு இணையாக மரணம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இந்த மோதலில் மேலும் சில இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேலும் 4 வீரர்கள் உடல் கவலைக்கிடமாக இருக்கின்றது என்று ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய ராணுவத்தினர் இன்று செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Four Indian soldiers are in critical condition after the violent face-off with Chinese troops on Monday evening: Sources
— ANI (@ANI) June 17, 2020