திமுக இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா என்பது வெறும் வதந்தி என்று முடிவாகியுள்ளது.
திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் வி.பி. கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றது என்ற தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் தான் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருக்கின்றது என்ற செய்தி வெறும் வதந்தி என முடிவாகியுள்ளது. இதனால் திமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர். அதே போல தற்போது திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் திமுகவினர் சோகத்தில் இருந்து வருகின்றனர். வி.பி.கலைராஜனும் எனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் வீட்டில்தான் நலமுடன் இருக்கிறேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.