செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியானதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் நேற்றுவரை மொத்த எண்ணிக்கை 3,108 ஆக இருந்தது.
மேலும் நேற்று வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1501 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1576ல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.