Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை – பின்வாங்கியது சீனா …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் வீரர்களுக்கும்  இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20  இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதேபோல் சீன தரப்பிலும் 40 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தாக தெரிகிறது.

இதையடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஸாவோ பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்தியா சரியான அணுகுமுறையுடன் வர வேண்டும். எல்லை பிரச்சனையில் இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை.  பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தூதரகம் வாயிலாகவும், ராணுவ ரீதியிலும்  பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.

 

Categories

Tech |