கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பன்னிமடை பகுதின் மற்றொரு வீட்டின் முட்டுச்சந்தில், முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்டு , கைகள் கட்டப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது .
மேலும் சிறுமி அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் , மாறி மாறி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமியின் கழுத்தில் கயிறை கட்டி இறுக்கியத்தில் கழுத்தில் உள்ள சிறுமியின் நரம்பு துண்டிக்க பட்டு சிறுமி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுக்க வேண்டுமென்று அதற்கான தொலைபேசி எண்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியம் காக்கப்படுமென்றும் , அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுமென்றும் காவல்துணையிடம் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.