Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!!

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ராணுவ உள்வட்டாரத் தகவல் வந்துள்ளது. அதேபோல சீன ராணுவத் தரப்பிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. லடாக் எல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் மூண்டது.

இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஆயுதங்கள் இல்லாத சண்டை இரு தரப்புக்கும் இடையே நடந்துள்ளது. குறிப்பாக கைகளை வைத்தும் கற்களை வைத்தும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் சண்டை போட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இருநாடுகளுக்கும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரச ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், லடாக் எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும் என சீனா வெளியுறவுத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |