Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு குறித்து முதல்வர்களுடன் மோடி 2ம் நாள் ஆலோசனை… தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்பு..!!

ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முழுஉரடங்கு அமல்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறார். முன்னதாக, முதல்வருடன் கடந்த மாதம் 11ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |