முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணம் விநியோகம் செய்ய உள்ளனர். 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.