தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 2,094 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,367 பேர் ஆண்கள், 805 பேர் பெண்கள், 2 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 30,961 ஆண்களும்,19,212 பெண்களும், 20 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 21,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 7,73,707 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, திருவள்ளூர் – 90, கடலூர் – 77, ராணிப்பேட்டை – 70, காஞ்சிபுரம் – 61, ராமநாதபுரம் – 51 ,தூத்துக்குடி – 50, திருவண்ணாமலை – 49 , மதுரை – 27, சேலம் – 25 ,விழுப்புரம் – 20, கள்ளக்குறிச்சி – 16, திண்டுக்கல் – 15, திருவாரூர் – 15, நெல்லை – 15, நாகப்பட்டினம் – 13, சிவகங்கை – 12, தஞ்சை – 12, தருமபுரி – 10, கன்னியாகுமரி – 9, புதுக்கோட்டை – 9, கரூர் – 8, திருச்சி – 8, நீலகிரி – 5, தென்காசி – 5, கிருஷ்ணகிரி – 3, தேனி – 3, கோவை – 2, நாமக்கல் – 2, விருதுநகர் – 2, திருப்பத்தூர் – ஒருவரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.