Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 48 பேர் உயிரிழப்பு… சென்னையில் மட்டும் 39 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1.147 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 842 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,634 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,367 பேர் ஆண்கள், 805 பேர் பெண்கள், 2 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 21,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.12 வயதுக்குட்பட்ட 2,533 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 41,742 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5,918 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |