தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 1,276, செங்கல்பட்டில் 162, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 61, திருவண்ணாமலை 49, கடலூரில் 77, நெல்லையில் 15, மதுரையில் 27, விழுப்புரத்தில் 20, தூத்துக்குடியில் 50, கள்ளக்குறிச்சியில் 16, ராணிப்பேட்டையில் 70, திண்டுக்கல்லில் 15, சேலத்தில் 14, கோவையில் 2, வேலூரில் 15, தஞ்சையில் 12, திருச்சியில் 8, விருதுநகரில் 2, ராமநாதபுரத்தில் 51,
தேனியில் 3, தென்காசியில் 5, திருவாரூரில் 15, கன்னியாகுமரியில் 9, நாகப்பட்டினத்தில் 13, கரூரில் 8, நாமக்கல்லில் 2, புதுக்கோட்டையில் 9, சிவகங்கையில் 12, திருப்பத்தூரில் 1, கிருஷ்ணகிரியில் 3, தர்மபுரியில் 10, நீலகிரியில் 5 என 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 64 பேருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யாட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா -7, கேரளா -5, ஒடிசா – 6, டெல்லி -4, ராஜஸ்தான் -2, ஜார்கண்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவர் என மொத்தம் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் -5, சவூதி அரேபியா – 4, சிங்கப்பூர் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த தலா 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவில் 2,174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று ஒரே நாளில் 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.