Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… வாலிபரை கட்டையால் அடித்து கொன்ற கும்பல்… போலீசார் விசாரணை..!!

சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் 30 வயதுடைய கட்டட தொழிலாளி சுகதேவ் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்த், பாலகுரு, சிவசாமி ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று இரவு மேற்கண்ட 4 பேருக்கும், சுகதேவ்விற்கும் இடையே வாய் வார்த்தை தகராறு ஏற்பட்டு, பின்னர் அது அடிதடியாக மாறியுள்ளது. அப்போது, நால்வரும் சேர்ந்து கட்டையால் அடித்ததில் பலத்தக்காயமடைந்த, சுகதேவ் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

பின்னர் அந்த வாலிபர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.. இந்த நிலையில் நேற்று (ஜூன் 16) மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி சுகதேவ் பலியானார். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், அரவிந்த் ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |