Categories
தேசிய செய்திகள்

சீனாவுக்‍கு பிரதமர் மோடி எச்சரிக்‍கை …!!

எல்லையில் அத்துமீறினால் எந்த சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி  சீனாவுக்‍கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து 15 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலசோனை நடத்தினர். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் திரு . அமித்ஷா உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனரர்.

கூட்டத்தில்எழுந்து நின்ற பிரதமர் திரு.மோதி லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த இந்தியா வீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் உரையாற்றியவர் 20 வீரர்களின் உயிர் தியாகம் வீண்போகாது என கூறினார். நாட்டின் ஒற்றுமையும் இறையாண்மையும் மிக முக்கியம் எனத்தெரிவித்தார். அண்டை நாடுகளுடன் இந்தியா அமைதியையே விரும்புவதாக குறிப்பிட அவர் அதேநேரம் எல்லையில் அத்துமீறினால் எப்பேற்பட்ட சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என சீனாவை எச்சரித்தார்.

Categories

Tech |