Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் இருக்கும் பல்லிகளை விரட்ட மிக எளிமையான டிப்ஸ்!

வீட்டில் இருக்கும் பல்லிகள் தொல்லையை தடுத்து, அதனை  விரட்டுவதற்கான சில வழிமுறைகளின் செய்தி தொகுப்பு:

  • வீட்டில் உள்ள கதவு, ஜன்னல் மற்றும் சுவரில் ஓட்டைகள் இருந்தால் அதை அடைத்து விடுங்கள். இதனால் பல்லிகளில் வீட்டினுள் வருவதைத் தடுக்கலாம்.
  • மீதமுள்ள உணவு பொருட்கள், நொறுக்குத் தீனியை சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் நன்றாக துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • குளிர்ந்த நீரை பல்லிகள் மீது தெளியுங்கள். அதனால் வேகமாக நகர முடியாது அந்த நேரத்தில் அதை துடைப்பத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்திவிடலாம்.
  • உங்கள் வீட்டில் இருட்டான இடங்களை அடிக்கடி பார்த்து சுத்தம் செய்து வைத்தால் பல்லிகள் தங்காது.
  • பல்லியை விரட்ட கொசுவிரட்டி ரசாயனத்தை தெளித்தால் பல்லிகள் ஓடிவிடும் முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது அப்படியே பயன்படுத்தினாலும் பல்லியை விரட்ட கொஞ்சமாக பயன்படுத்தலாம்.
  • கிச்சன் சிங்க் மற்றும் அதன் அடிப்பாகம் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
  • முட்டை ஓடுகளை பல்லிகள் வரும் இடத்தில் வைத்தால் முட்டை வாசனையால் பள்ளிகள் வராது.
  • பல்லிளை விரட்ட அவை அதிகம் வரும் இடங்களில் பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி  வைக்கலாம்.
  • பல்லிகள் அதிகம் வரும் இடங்களில் நாப்தலின் பந்துகளை வைத்துவிட பல்லிகள் வருவதை தவிர்க்கலாம்.

Categories

Tech |