சென்னை தாம்பரம் அடுத்துள்ள வண்டலூர் ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், அந்தநபர் அப்பகுதியிலுள்ள மதுபானக் கடை ஒன்றின் பாரில் வேலை செய்துவந்த ராமு(வயது 40) என்பதும், கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபான பார்கள் மூடப்பட்டிருப்பதால், மதுபானங்களை வாங்கி அந்தப் பகுதியில் சிலருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது..
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரயில் மோதி உயிரிழந்தாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.