முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள்,
- உணவு விநியோகம் செய்பவர்கள் மற்றும் வங்கிக்குச் செல்லும் நபர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள்.
- அடையாள அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தேவையின்றி வெளியில் சுற்றினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி இல்லை.
இதுவே காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள் ஆகும்