மேஷ ராசி அன்பர்களே …! புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பொருளாதார நிலை உயரும் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சல் ஆகவே செய்து முடிப்பீர்கள். தேவையான பண உதவிகளும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டி பெண்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். கௌரவம் உயரும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.