தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மே மாதம் அக்னி நட்சத்திரத்தை தாண்டிய போதிலும் வெளியில் ஆங்காங்கே வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மதுரை விமான நிலையம் அருகே நேற்று 105.8 செல்ஷியஸிலும், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 104.3 என்ற அளவிலும், கடலூர், பரங்கிப்பேட்டை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் 103.6 என்ற அளவிலும், திருச்சி 103.4, தூத்துக்குடி 103.1, மதுரை 102.9, வேலூர் 100.9, நாகை 100.5 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களிலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.