Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… கல்யாண வாய்ப்பு கைகூடும்…. உடல் சோர்வு இருக்கும் …!!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். கடல் தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வராவிட்டாலும், சுமாராகவே இருக்கும்.

ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவுகள் கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். உடல் சோர்வு கொஞ்சம் வரலாம் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவரிடம் உரையாடும் பொழுது வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம்.

பொறுமையைக் கடைப்பிடித்தால் இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிவட்டார மதிப்பு உங்களுக்கு உயரும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |