Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒரே நேரத்தில் 32 பேருடன் பேச முடியும் – அதிரடி காட்டும் கூகுள் டியோ!

தனது வாடிக்கையாளர்களைக் கவர ஒரே சமயத்தில் 32 பேருடன் வீடியோ காலில் பேசும் புதிய வசதியை கூகுள் டியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு அதிவேக இணைய வசதி, ஒரே நேரத்தில் பலருடன் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் தேவைப்படுகின்றன. அதன்படி, வாடிக்கையாளர்களை ஈர்க்க பல செயலிகளும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், தற்போது கூகுளின் பிரபல வீடியோ சாட்டிங் செயலியான கூகுள் டியோ, தனது குரூப் வீடியோ கால் வசதியின் மூலம், தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் இணையலாம் என அறிவித்துள்ளது.

இது குறித்து கூகுளின் தயாரிப்பு மேலாண்மைப் பிரிவின் மூத்த இயக்குநர் சனாஸ் அஹரி லெமெல்சன் தனது ட்விட்டர் பக்கதில், “கூகுள் டியோவில் பலரும் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வசதியை இன்று அறிமுகப்படுத்துகிறோம். இனி வீடியோ காலில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த வசதி தற்போது முதல்கட்டமாக கூகுள் க்ரோம் தளத்தில் வெளியிடப்படுவதாகவும் விரைவில் அனைத்து தளங்களிலும் கிடைக்கும் என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆப்பிளின் ஃபேஸ்டைம் மூலம் 32 பேரும், ஸ்கைப், ஃபேஸ்புக் மெசஞ்சர்களில் 50 பேரும், ஜூம் செயலியில் 100 பேர் வரையும் குரூப் வீடியோ காலில் ஒரே நேரத்தில் பேசமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |