நாட்டின் நலன் கருதி சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார் :
லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல வீரர்கள் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சீன தயாரிப்பு பொருட்களை வணிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும். மாறாக இந்தியா தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றும். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு அல்லாது மாவட்டங்களில் வணிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி தெளித்தும், பொதுமக்களுக்கு அறிவுரை கூறி கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் கடைகளுக்கு சீல் வைப்பது அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட அபாரதங்களை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.