Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் …!!

கொரோனா தடுப்பிற்க்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது :

சென்னை கோவிலம்பாக்கத்தில்  சேர்ந்த இம்மானுவில் என்பவர் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நீடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்ககால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில்  தெரிவித்திருந்தார். தென்கொரியா, சுவீடன், போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே  வைரஸ் தொற்றைகட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன்,  ராமசாமி, அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அரசியல் கட்சி வைத்திருப்பதால் அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன் மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |