சென்னையில் மட்டும் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் கொரோனாவால் இறந்து இருக்கின்றார்கள். பெரும்பாலோனோருக்கு கொரோனவோடு சேர்த்து இன்னும் பிற நோய்கள் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 4 உயிரிழப்புகள் நடந்து இருப்பதாக தெரியவருகிறது . அதே போல தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. தனியார் மருத்துவனையில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை வந்திருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் அனைவருமே கிட்டத்தட்ட ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவருகிறது.