Categories
தேசிய செய்திகள்

இதான் நடந்தது…! என்ன செய்யலாம் சொல்லுங்க ? அதிரடி முடிவெடுத்த மோடி …!!

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எதிர்கட்சிகளிடம் நாளை ஆலோசனை நடத்த இருக்கின்றார்.

கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து இந்த விவகாரம் சம்பந்தமாக விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவது ஏன் என்றும் ? சீனா – இந்தியா மோதல் தொடர்பாக  நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை சொல்ல வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் பிரதமர் அலுவலகம் சார்பில் அனைத்து கட்சிகள் கூட்டம் நாளை  சரியாக ஐந்து மணி  காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி மூலம் அவர்கள் அந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள். சீனா இந்தியா எல்லை விவகாரம் சம்பந்தமாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சீனா – இந்தியா மோதல் சம்பவம் குறித்து எடுத்துரைக்க உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் சீனா – இந்தியா எல்லைப் பிரச்சினை சம்பந்தமாக ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்றும் தெரிவிப்பார் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |