கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளது என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணி நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக மருத்துவ பணியாளர் நியமனத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளது. அரசு ஒப்பந்தம் செய்த ஜென்டில்மேன், ஹெச் ஆர் நிறுவனம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரை பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டி வருகின்றார்.
கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டதாக தகவல்கள் வெளியாயின.#TNFightsCorona 1/5 pic.twitter.com/dNDcpoQEis
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 18, 2020