அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதியோர்களின் நலன் கருதி இயங்கி வரும் சமுதாய உணவுக் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு தீவிரப் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள சமுதாயக் கூடங்கள் மேலும் வலுப்படுத்தி போதுமான அளவு உணவு சமையல் செய்து இந்த உணவை விலையில்லாமல் தேவைப்படும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த நடைமுறை என்பது நாளை முதல் 30ம் தேதி வரை அடுத்த 12 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.