சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சீனா அத்துமீறலை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும். சீன உணவுகளை இந்தியர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கிறார்.