மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 35 வயது ஜெயகாந்த், தன்னுடைய பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.. 28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிறத்தில் பெரிய சாக்குப்பை ஓன்று மிதந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனைப்பார்த்த மீனவர்கள் அந்தப் பையை எடுத்துப் பிரித்து பார்த்தபோது, அதனுள் 32 கிலோ எடையுடன் 16 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள், கடலில் கண்டெடுக்கப்பட்ட 32 கிலோ கஞ்சா மூட்டையை கிராம பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.. அதனைத்தொடர்ந்து இது குறித்து கிராம பஞ்சாயத்தார்கள் கொடுத்த தகவலின்பேரில் தரங்கம்பாடி கடற்கரையோர காவல்படை காவல் துறையினர் சின்னங்குடி கிராமத்துக்கு விரைந்து வந்து கஞ்சா மூட்டையை எடுத்துச் சென்றனர்.. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்..