Categories
தேசிய செய்திகள்

எல்லை அத்துமீறலால் 3,000 சீனப் பொருட்களுக்குத் தடை…!

சீனாவின் எல்லை அத்துமீறலால் சீனாவின் பொருட்களை புறக்கணிக்க அகில இந்திய வர்த்தக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சீனா-இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சனை இருந்தாலும்  இதுவரையும் வர்த்தக ரீதியில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. எனினும் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிக்க அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்படும் 450 மேட் இன் சீனா தயாரிப்புகள் பட்டியலை அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் கிட்டத்தட்ட 3,000 சீனப் பொருட்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீன பொருட்களை புறக்கணித்துவிட்டு அவற்றிற்கு பதிலாக இனி இந்தியப் பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

Categories

Tech |