Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்… செங்கல்பட்டு மதுக்கடைகளில் முண்டியடிக்கும் கூட்டம்..!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக முழு ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாது என உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Categories

Tech |