இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி திட்டமிட்டபடி அந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் பால்கி தாலுகா கோன் மேலுகுந்தா கிராமத்தில் வைத்து கல்யாணம் நடந்தது. கல்யாணம் முடிந்ததும் தன்னுடைய மனைவியை தனது வீட்டுக்கு இளைஞர் அழைத்து வந்தார். இதற்கிடையே மணமகனான இளைஞருக்கு நடத்தப்பட்டிருந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிற்கு சென்றனர். ஆனால் இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து அந்த இளைஞரை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கல்யாணம் நடந்து முடிந்த சில மணிநேரத்திலேயே மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பீதரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அதே நேரத்தில் தனிமை முகாமிலிருந்து சென்ற பின்பு 2 வாரங்கள் கழித்து இளைஞருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை வருகின்றனர்.
மேலும் மணமகள் மற்றும் கல்யாணத்தில் பங்கேற்றவர்கள் என பலரையும் கண்டறிந்து சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.