தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கடந்த 14ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவரது உடல் தூத்துக்குடி மையவாடியில் கொண்டு வரப்பட்டு அங்கு குழி தோண்டப்பட்டு பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 487ஆக உயர்ந்துள்ளது. இதில் 318 பேர் குணமடைந்துள்ள நிலையில் 167 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்