நாளை பொதுமுடக்கம் கடுமையாக பின்பற்றப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், தேவையின்றி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல். இந்த முறை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.
சென்னையில் ட்ரான் கேமராக்கள் மூலம் வெளியே சுற்றுபவர்கள் கண்காணிக்குக்கப்படுவார்கள். ஊரடங்கை கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னை நகருக்குள் மட்டும் 288 சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தேவை இல்லாமலாமல் வெளியே செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.
சென்னையில் இருந்து வெளியே தினசரி வேலைக்கு செல்ல அனுமதி கிடையாது. காய்கறிகள் மளிகை கடைக்கு அருகில் இருப்பதை பயன்படுத்தவும். காய்கறிகளை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. மத்திய மாநில அரசு அலுவலக பணியாளர்கள் அடையாள அட்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.