அமமுக_வுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியத்தை எடுத்து பரிசுப்பெட்டி சின்னம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது…
நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதில் அமமுக கழகத்திற்கு குக்கர் வழங்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் அமமுக ஒரே அமைப்பாக செயல்படுவதால் அதை கட்சி போன்று கருதி பொதுச் சின்னத்தில் ஏதேனும் ஒன்றை பரிசளித்து வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் அனைவருக்கும் பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களும் பொதுவான சின்னமாக இது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சின்னம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வழங்கப்பட்டது டிவீட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. பல்வேறு வண்ணங்களில் பரிசு பெட்டி சின்னத்தை அமமுக_வினர் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி அனைவரின் கவனத்தை பெற்றது மேலும் பரிசுப்பெட்டி சின்னம் தேர்தல் ஆணையம் வெற்றியின் அடையாளமாக வழங்கப்பட்டதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.